Saturday, 12 March 2011

கல்லறை கவிதைகள்


 உன்னுடன் மட்டுமே பேச துடித்து கொண்டிருந்த பொது பேசாத நீ 
துடிப்பு  நின்ற உடன் ஏன் பேச வந்தாய்  என் கல்லறைக்கு. . . .!!!!




உன்னை காண ஏங்கி கொண்டிருக்கும் என் விழிகள் விரைவில் தூங்கி கொண்டிருக்கும் என் கல்லறையில் . .!








என் நினைவில் நீ இருந்த வரை 
நீ என்னை நினைக்கவில்லை 
உன் நினைவில் நான் வந்துவிட்டேன் 
எனக்கு நினைவே இல்லை. . .!








நான்  சுவாசித்த  பொது  அவள்  நேசிக்கவில்லை 
அவள்  நேசித்த  பொது  நான்  சுவாசிக்கவில்லை . . . .!









எப்போதும்  உன்னை  தேடி  தானே  நான்  வருவேன்
இப்பொது  மட்டும்  ஏன்  நீ  வந்தாய்  என்னை  தேடி
.
.

என்  கல்லறைக்கு . . .  :(




காதல்  இல்லாத  அவளின்  கூந்தலை  அலங்கரிபதை  விட
காதல்  உள்ள  உன்  கல்லறையை  அலங்கரிபதே  மேல் . . . . ! :(


நான்  அவளுக்காக எழுதாத கவிதையே இல்லை
அவள்  எனக்காக  எழுதிய ஒரே கவிதை கல்லறை  மணலில்  என்னுடைய  பெயர் .  :(




என்னை நீ நேசிக்காத பொது எதற்காக நான் சுவாசிக்க வேண்டும். . .? :(


உன் நினைவுகள் ஏதும் இல்லாத நாள் என்னுடைய நினைவு நாள். . . :(




நான் உன் மீது கொண்டுள்ள பாசம் என் சுவாசம் நின்ற பின்னும் பேசும். . . :(




பிடித்தது கிடைக்காத இவ்வுலகில் நிலைத்து நிற்பதில் என்ன பயன்.....!!!


என் கவிதைகளுக்கு மட்டுமே அவள் சொந்தம் என எண்ணினேன் அனால் இப்போது என் கல்லறைக்கும் அவளே சொந்தம் ...!!!


கடலில்  விழுந்தால்  கரைக்கு  திரும்பலாம் காதலில்  விழுந்தால்  கல்லறை  தான் . . . :(


Friday, 4 February 2011

missing you

மீன்களுக்கு  தண்ணீரில் வாழ்க்கை......!
எனக்கு கண்ணீரில் வாழ்க்கை.......!
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் .......!


தொலைவில் நீ சென்றாலும் நினைவில் நீ இருப்பாய் . . . .!

எனக்கு  நினைவிருக்கும் வரை என் நினைவில் நீ இருப்பாய் . . . !












உன்னை பற்றி நினைக்கும் நேரம்
நான் என்னை பற்றி மறக்கும் நேரம் .......! என்றும் உன் நினைவுகளுடன் ......! :(


உனக்காக  சிந்திய  கண்ணீரை  பூக்களின்  மேல்  சிந்திருந்தால்
பூக்கள் கூட  வாடாமல் இருந்திருக்கும் ...!
நாம் வளர இவன் வாடுகிரானே என்று எண்ணி ...!!!!









தூங்கும் பொது கனவில் நீ 
எங்கும் பொது நினைவில் நீ
பார்க்கும் பொது மட்டும் ஏன் தொலைவில் . . . .? :(
















கண்கள் உன்னை தேடுவதால் தான்
தூக்கம் என்னை தேடவில்லை ......!


பேய்கள் கூட என்னை காதலிக்கும்
உன்னை நினைத்து நான் உறங்காமல் இருப்பதை கண்டு ......!


உலகிற்கு தண்ணீர் மழை
எனக்கு கண்ணீர் மழை
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ......!

Thursday, 3 February 2011

My love Kavithai's

என்னையே எனக்கு அழகாக காட்டிய மிக சிறிய கண்ணாடி தான் உன் கண்கள் .......!



பூவில்  உள்ள வாசம் போகலாம் 
ஆனால் . . . .
நான் உன் மீது கொண்டுள்ள பாசமும்  நேசமும் என் சுவாசம் உள்ள வரை போகாது . . . . :)












பேச நினைப்பதெல்லாம் மறந்து விடுகிறேன் ....!
உன் குரல் கேட்ட அடுத்த நொடி :*

நினைவில் நீ நிறைந்துவிடுகிறாய் ..........! 






கண்கள் உலகை காண்பதற்கு படைக்கப்பட்டது
உன்னை பார்த்த பின் உலகம் கண்களுக்கு தெரியவில்லை
என் உலகமே நீயாகிவிட்டாய் ......!


உடல் உறவு காதல் அல்ல
உள்ளத்தின் உறவும் உணர்வுமே உண்மையான காதல் .....!